திருக்குவளையில் ஆற்றில் பெண் பிணம்

திருக்குவளையில் ஆற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

Update: 2022-10-27 18:45 GMT

வேளாங்கண்ணி:

திருக்குவளை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்.இவருடைய மனைவி கோமதி (வயது45). இவர்கள் 2 பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீபாவளி அன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு திருக்குவளையை அடுத்த குண்டையூர் செல்லும் சந்திராநதி பாலத்தின் மதகில் அமர்ந்திருந்துள்ளனர். பின்னர் அதே இடத்தில் அவர்கள் தூங்கி உள்ளனர். சிறு நேரத்தில் கணவர் எழுது பார்த்த போது மனைவி கோமதியை காணவில்லை. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை குண்டையூர் அருகே சந்திராநதியில் பெண்ணின் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த சேகர் அங்கு சென்று பார்த்த போது ஆற்றில் பிணமாக கிடந்தது கோமதி என்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்குவளை போலீசார், கோமதியின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் பாலத்தில் தூங்கிய கோமதி தவறி ஆற்றில் விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்