வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவு தர வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள்முழு ஆதரவு தர வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2022-12-18 18:45 GMT

உடன்குடி:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தி.மு.க. பொதுக்கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டம் உடன்குடி மெயின்பஜார் அண்ணாதிடலில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்துதலைவர் பிரம்ம சக்தி, உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலளார் இளங்கோ, உடன்குடியூனியன் துணை தலைவர் மீராசிராஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால் ராஜேஷ் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள் கரூர் முரளி, நாகை சாகுல் ஹமீது, முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், துணைச் செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஆழ்வார் திருநகரியூனியன் தலைவர் ஜனகர், மாவட்ட பிரதிநிதி சிராஜூதீன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேச்சு

கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க., அறிவித்த பல்வேறுதிட்டங்களில் பெரும்பாலானவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். தமிழக அரசு அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டத்தின் பயனும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்துகிறார். மக்களைத் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து முதல்-அமைச்சர் சாதனை படைத்து வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவு தர வேண்டும், என தெரிவித்தார். உடன்குடி பேரூராட்சிகவுன்சிலர் ஜான் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்