போடியில்பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

போடியில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update: 2023-10-15 18:45 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போடி நகரில் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் தாசில்தார் அழகுமணி, இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, புவனேஸ்வரி, தீயணைப்பு துறை அதிகாரி வீரபத்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா?, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத சில கடைகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்