கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.நினைவரங்கத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.நினைவரங்கத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு நடத்தினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் கி.ராஜநாராயணன் நினைவரங்கம் கட்டும் பணி கடந்த ஆண்டு நவ.11-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இப்பணிநிறைவடைந்துள்ள நிலையில் நேற்று காலையில் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்த நினைவரங்கத்துக்கு வந்தார். அவர் அங்குள்ள புல்வெளி, பாதைகள், டிஜிட்டல் நூலகம், நிர்வாக அறை, நூலகம் அமைக்கப்படும் அறை, மற்றும் வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் செந்தில்ராஜ், உதவி கலெக்டர் மகாலட்சுமி, பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் சத்யமூர்த்தி, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.