கோவில்பட்டியில் சிறுமியை கடத்தி திருமணம்; போக்சோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-16 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் 17 வயது சிறுமி திடீரென்று காணாமல் போனதாக, சிறுமியின் தந்தை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக பாரதி நகர் நடுத்தெரு சமுத்திரவேல் மகன் பிரகாஷ் (வயது 23) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் பிரகாஷ் சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்தது தெரியவந்தது. அவரை மேற்கு போலீசார், அனைத்து மகளிர் ேபாலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரகாசை கைது செய்தனர். இவர் நகரசபையில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்