கோவில்பட்டியில்த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நீதிமன்றங்கள், உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய வகுப்பறைகளை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று த.மா.கா.வினர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டில்களுடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். அங்கு வந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் அவர்களிடம் இருந்த கட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பொது பணித்துறை பொறியாளர் சந்திரசேகர் கலந்து கொண்டார். சாலையை சீரமைக்க மதிப்பீடு தயார் செய்து, பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உதவி கலெக்டர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்