மாநில கால்பந்து போட்டியில்திருச்சி அணி வெற்றி

நாசரேத்தில் நடந்துவரும் பள்ளிகளுக்கு இடையேயான மாநில கால்பந்து போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்றது.

Update: 2023-09-07 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில கால்பந்து போட்டி நடந்து வருகிறது. நான்காவது நாளான நேற்று காலையில் நடைபெற்ற முதல் போட்டியில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி அணியும், ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணியும் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது. மாலையில் முதல் அரைஇறுதி போட்டி நடந்தது. இதில் ஊட்டி திருஇருதய மேல்நிலைப்பள்ளி அணியை 0-5 கோல் கணக்கில் திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்