சிவகளையில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

சிவகளையில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-11-08 18:45 GMT

ஏரல்:

ஏரல் அருகே உள்ள சிவகளை நாடார் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 66). இவர் சிவகளை நடுத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். நேற்று காலையில் கடையை திறக்க வந்த பொழுது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை 

Tags:    

மேலும் செய்திகள்