கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் மண் சரிந்து தொழிலாளி படுகாயம்

கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின் மண் சரிந்து குழியில் விழுந்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2023-10-25 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூரை அடுத்துள்ள முக்காணி கிராம பஞ்சாயத்து பகுதியில் ரோட்டிற்கு கீழ்புறம் கழிவுநீர் வெளியேறுவதற்காக ஏற்கனவே இருந்த கால்வாய் மூடி பழுதடைந்தது. இதனால் புதிதாக கழிவுநீர் வாய்க்காலில் குழாய்கள் அமைத்து, அதன் மூலம் கழிவு நீரை வெளியேற்ற கிராம பஞ்சாயத்து சார்பில் பணி நடந்து வருகிறது.

இப்ப பணியில் குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா காரங்காடு பகுதியில் உள்ளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் குழிக்குள் இறங்கி குழாய்களை இறக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த காரங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் கிருஷ்ணன் (வயது 22) எதிர்பாராமல் கிருஷ்ணன் மீது மண் சரிந்து விழுந்தது. இதனால் மண்ணுக்குள் கிருஷ்ணன் சிக்கி கொண்டார். தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் மற்றும் சக பணியாளர்கள் மண்ணுக்குள் சிக்கி கிடந்த கிருஷ்ணனை மீட்டனர். அவருக்கு இடது கால் எலும்பு முறிந்திருந்தது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்