பொய்கை சந்தையில் மாடுகளின் வரத்து குறைந்தது

பொய்கை சந்தையில் விற்பனைக்கான மாடுகளின் வரத்து குறைந்தது.

Update: 2022-10-25 17:29 GMT

 வேலூர் அடுத்து பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருமைகள் மற்றும் ஆடு, கோழி அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பொய்கை மாட்டுச் சந்தையில் விற்பனை களை கட்டியது. கடந்த வாரம் நடந்த மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நேற்று வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை பொய்கை மாட்டுச் சந்தை செயல்பட்டது. ஆனால் வழக்கத்தை விட மாடுகளின் வரத்து குறைவாக இருந்தது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் தீபாவளி பண்டிகை காரணமாகவும், மற்றும் சூரிய கிரகணம் என்பதாலும் மாடுகளின் வரத்து பாதியாக குறைந்தது. அடுத்த வாரத்தில் கால்நடைகளின் வரத்து அதிகரிக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்