பிளஸ் -1 தேர்வில் பெரம்பலூர் முதலிடம், வேலூர் கடைசி இடம்
பிளஸ் -1 பொதுத்தேர்வு முடிவில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்து உள்ளது.
வேலூர்,
சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இத்தேர்வை வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 16,216 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 12,976 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 80.02 சதவீதமாக உள்ளது .தமிழகத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக வேலூர் உள்ளது.
கடந்த வாரம் 10 மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதிலும் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் பிளஸ்-1 தேர்விலும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.