நாடாளுமன்ற வளாகத்தில்வ.உ.சி. வெண்கலசிலை வைக்க வேண்டும்:கொள்ளு பேத்தி கோரிக்கை

நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சி. வெண்கலசிலை வைக்க வேண்டும் என்று கொள்ளு பேத்தி கோரிக்கை விடுத்துள்ளார்

Update: 2023-09-05 18:45 GMT

கோவில்பட்டி:

செக்கிழுத்தச் செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 152-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி கோவில்பட்டியில் உள்ள வ.உ. சி யின் கொள்ளுப்பேத்தி செல்வி தனது வீட்டில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வ.உ.சி. பெயரை சூட்டிய முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலையை நிறுவ மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் முருகானந்தம், டாக்டர் கபிலாஸ் போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்