சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய இ-சேவை மையத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இட்டமொழி:
நாங்குநேரியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இங்கு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பொது இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய இ-சேவை மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.கிருஷ்ணன், நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அழகியநம்பி, சந்திரசேகர், செல்லபாண்டியன், வாகைதுரை, நம்பிதுரை, ராமஜெயம், எம்.எம்.ராஜா, சுந்தர், வசந்தா, ம.தி.மு.க. பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.