ஈரோடு மாவட்டத்தில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு7 ஆயிரத்து 347 மாணவ-மாணவிகள் எழுதினர்

ஈரோடு மாவட்டத்தில் நடந்த தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 7 ஆயிரத்து 347 மாணவ- மாணவிகள் எழுதினர்.;

Update:2023-10-16 07:14 IST

ஈரோடு மாவட்டத்தில் நடந்த தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 7 ஆயிரத்து 347 மாணவ- மாணவிகள் எழுதினர்.

திறனறிவு தேர்வு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் விதமாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

இதில் ஈரோட்டில், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம், ரெயில்வே காலனி மேல்நிலை பள்ளிக்கூடம், செங்குந்தர் பள்ளிக்கூடம், மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம், சிவகிரி ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் என மாவட்டம் முழுவதும் 23 மையங்களில் திறனறிவு தேர்வு நடைபெற்றது.

கல்வி ஊக்கத்தொகை

இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 7 ஆயிரத்து 896 பிளஸ்-1 மாணவ- மாணவிகளில், 7 ஆயிரத்து 347 பேர் தோ்வு எழுதினர். 549 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு பணியில் 390 ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் பிளஸ்-2 நிறைவு செய்யும் வரை 2 ஆணடுகளுக்கு சேர்த்து ரூ.33 ஆயிரம் வரை கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்