பர்கூர் மலைப்பகுதியில் சாலையோர குழியில் சிக்கிய லாரி

பர்கூர் மலைப்பகுதியில் சாலையோர குழியில் லாரி சிக்கியது.

Update: 2023-06-05 21:10 GMT

அந்தியூர்

கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து ஈரோட்டுக்கு சிமெண்டு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை குருசாமி என்பவர் ஓட்டினார். அந்தியூரை அடுத்த தட்டக்கரை அருகே சென்றபோது எதிரே வரும் லாரிக்கு வழி விடுவதற்காக சாலையோரத்தில் லாரியை குருசாமி இறக்கினார். அப்போது சாலையோரமாக வெட்டப்பட்ட குழியில் லாரி வசமாக சிக்கி கொண்டது.

இதுபற்றி அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி அங்கிருந்து மீட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்