ஆண்டிப்பட்டியில்வெப்பத்தை தணித்த கோடை மழை

ஆண்டிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கோடை மழை வெப்பத்தை தணித்தது.;

Update:2023-03-20 00:15 IST

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் ஆண்டிப்பட்டி, பாலக்கோம்பை, ராஜதானி, ஏத்தகோவில் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்