தஞ்சையில், ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
தொழிற்சாலை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தஞ்சையில், ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 மணி நேர வேலை சட்டத்தை 12 மணிநேரமாக திருத்தியமைத்த தொழிலாளர் விரோத, தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ் மாநில குழு சார்பில் தஞ்சை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் மணிமூர்த்தி, மின்வாரிய சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் பொன்.தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா நிறைவு செய்து பேசினார்.