தமிழ்நாட்டில்பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:அனைத்து துறை சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து துறை சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-08-08 18:45 GMT

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரவை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் நேற்று அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் திரவியம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் கருணாகரன், அல்போன்ஸ் லிகோரி, பரமானந்தம், சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ந.வெங்கடேசன் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி வேலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாவட்ட பெருளாளர் டெரன்ஸ் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்தார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள், வருவாய் கிராம ஓய்வூதியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். 70 வயது முடிந்ச ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அகவிலைப்படி அறிவிக்கும் போது, தமிழக அரசும் நிலுவையின்றி அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவரும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்ட பஸ் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தை மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன் நிறைவு செய்து பேசினார். கூட்டத்தில் கலையரசன், ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தூத்துக்குடி வட்டக்கிளை செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்