தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க திட்டம்...?

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Update: 2023-03-15 07:14 GMT

சென்னை,

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தமிழகத்தில் கடந்த 13ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும், நேற்று பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கியது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதி தேர்வு முடிவடைகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி தேர்வு முடிவடைகிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்வு தொடங்கி 20 தேதி முடிவடைய உள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பின்னர் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அதாவது, ஏப்ரல் 24 முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 17ம் தேதியே தேர்வுகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்