தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில்வீடுகள் வாங்கியவர்கள் நிலுவையைசெலுத்தி பத்திரத்தை பெறலாம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் வாங்கியவர்கள் நிலுவையை செலுத்தி பத்திரத்தை பெறலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-25 18:45 GMT

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நெல்லை வீட்டு வசதி பிரிவுக்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்தாமல் உள்ள தகுதியான ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகை செலுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வட்டிச் சலுகை அறிவித்தது. இந்த சலுகை வருகிற 3-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆகையால் நெல்லை வீட்டு வசதி பிரிவுக்கு உட்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று குறிப்பிட்ட காலம் கடந்தும், நிலுவைத் தொகை செலுத்தாமல் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்