தாளவாடியில் பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

தாளவாடியில் பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்;

Update: 2023-10-16 22:13 GMT

தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு தனியார் பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று தாளவாடியில் இருந்து சாம்ராஜ் நகருக்கு செல்லும் தனியார் பஸ்சில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ்சில் 3 மூட்டைகளில் 70 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே சாக்கு மூட்டைகளை வைத்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 'அவர் தாளவாடியை சேர்ந்த நாகராஜ் (வயது 48) என்பதும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ரேஷன் அரிசி கடத்தியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாகராஜை போலீசார் கைது செய்ததுடன், 70 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்