ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில்தூய்மைப்பணிக்காக பேட்டரி வாகனங்கள்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தூய்மைப்பணிக்காக பேட்டரி வாகனங்கள் இயக்கி வைக்கப்பட்டன.

Update: 2023-01-31 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதியில் தூய்மை பணிக்காக பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 6 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேருராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், சுகாதாரஆய்வாளர் தியாகராஜன், எழுத்தர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் கன்னியம்மாள்சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்