ஸ்ரீவைகுண்டத்தில்பஸ் கண்டக்டர் திடீர் சாவு

ஸ்ரீவைகுண்டத்தில் பஸ் கண்டக்டர் திடீரெனஇறந்து போனார்.

Update: 2023-05-05 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள புலியூர்குறிச்சி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இசக்கிவேல் (வயது 54). இவர் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று மதியம் வழக்கம்போல பணிக்கு வந்தார். பணிமனை அலுவலகத்திற்குள் நுழைந்த இசக்கிவேல் திடீரென மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு வருகிற 24-ந் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்