தெற்கு கழுகுமலையில்மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

தெற்கு கழுகுமலையில் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-01-30 18:45 GMT

கழுகுமலை:

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமணை கண்காணிப்பாளர் கமலவாசன் ஆலோசனையின் பேரில், தெற்கு கழுகுமலை மகாலட்சுமி மேச் பாக்டரியில் தொழிலாளர்களுக்கு பணியிடை அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மனநல மருத்துவர் நிரஞ்சனாதேவி தலைமை தாங்கி தீப்பெட்டி குச்சி அடைப்பு தொழிலாளர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கினார்.

சமூக பணியாளர் பெரியசாமி தொழிலாளர்களுக்கு மனநல பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் காப்பக மேற்பார்வையாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்