சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனா்.
சிவகாசி,
சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனா்.
ஆலோசனை கூட்டம்
சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- எங்கு பார்த்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் தான் பேச்சாக உள்ளது. தற்போது தி.மு.க. விற்கு இறங்குமுகம். அ.தி.மு.க.விற்கு இது ஏறுமுகம். ஆகவே அடுத்து தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரப்போவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி வாகை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
விரைவில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. எந்த தேர்தல் வந்தாலும் விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி வாகைசூடும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். இதை தான் பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், சந்திரபிரபாமுத்தையா, கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிவகாசி யூனியன் முன்னாள் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், வக்கீல் முத்துப்பாண்டி, கலாநிதி, வக்கீல் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.