சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,050-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,050-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி வழக்கம்போல் நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.945-க்கும், முல்லை ரூ.720-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.92-க்கும், பட்டுப்பூ ரூ.88-க்கும், ஜாதிமல்லி ரூ.550-க்கும், கனகாம்பரம் ரூ.1,050-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.300-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.