ராணிப்பேட்டை மாவட்டத்தில்3,343 பேர் குரூப்-1 தேர்வு எழுதுகின்றனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில்3,343 பேர் குரூப்-1 தேர்வு எழுதுகின்றனர்

Update: 2022-11-18 18:18 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில்3,343 பேர் குரூப்-1 தேர்வு எழுதுகின்றனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்தாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தொகுதி-1 (குரூப்- 1) தேர்வுகளை 3,343 பேர் இன்று (சனிக்கிழமை) எழுதுகின்றனர். இதற்காக.‌ ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு பகுதிகளில் 8 இடங்களில் ராணிப்பேட்டை கிரேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, கங்காதரா மெட்ரிகுலேஷன் பள்ளி, எல்.எப்.சி. மெட்ரிகுலேஷன் பள்ளி, வி.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி, வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வினை கண்காணிக்க 2 பறக்கும் படை குழுக்களும், 4 மொபைல் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வினை‌‌ கண்காணிக்க 2 துணை ஆட்சியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, காவல் பாதுகாப்பு போன்ற வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்