புஞ்சைபுளியம்பட்டியில் மழையால் வீடு இடிந்து விழுந்தது
வீடு இடிந்து விழுந்தது
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமரன் வீதியில் ஆட்கள் குடியில்லாமல் இருந்த வீடு ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் மழை காரணமாக சிறிய தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.