பெருந்துறையில் வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் சாவு

பெருந்துறையில் வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் இறந்தாா்.

Update: 2023-10-10 00:11 GMT

பெருந்துறை

பெருந்துறை-காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள சேகர் அபார்ட்மெண்ட் என்கிற குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகன் கவின் (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் பார்சல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கவின் நேற்று முன்தினம் விடுமுறைக்காக பெருந்துறை வந்த தனது நண்பர்கள் சிலருடன் பெருந்துறை-ஈரோடு ரோட்டில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் கரையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, கைகளை கழுவ வாய்க்கால் தண்ணீருக்குள் இறங்கி உள்ளனர். அப்போது வாய்க்கால் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கவினின் கால்கள் வழுக்கியதால் வாய்க்கால் தண்ணீருக்குள் தவறி விழுந்து விட்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கவினை தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. அப்போது கவின் விழுந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் பிணமாக மிதந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்