பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-10-02 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்திரா முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுருபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மழைக்காலங்களில் தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக ஆற்றில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் உள்ள பழுதடைந்த தரைப் பாலத்தை சரி செய்ய வேண்டும்.ஊராட்சியில் உள்ள மயான சாலைகளை மழைக்காலத்துக்கு முன்பு சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராமநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்