ஓசநூத்து கிராமத்தில்கலைஞரின்வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

ஓசநூத்து கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-12-28 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்து கிராமத்தில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

முகாமிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி முன்னிலை வைத்தார். எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜீவராஜ்பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை எம்.எல்.ஏ. வழங்கினார். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவு முறைகளை அவர் பார்வையிட்டார். மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.

நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகவதி, மாவட்ட மகப்பேறு மருத்துவர் ஐஸ்வர்யா, குலசேகரநல்லூர் பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி, மருத்துவ அலுவலர்கள் ஜெயபிரபா, இலக்கியா, ஜீவிதா, சுப்பிரமணியன், சித்த மருத்துவர் மல்லிகா, கண் மருத்துவர் வேல்குமார், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முருகராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர்கள் காளிமுத்து, பாபு, தினேஷ், மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்