உசிலம்பட்டி அருகே பிறந்த ஒரு மாதத்தில் பெண் குழந்தை திடீர் சாவு

பிறந்த ஒரு மாதத்தில் பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2023-09-02 21:37 GMT

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித். இவருடைய மனைவி லாவண்யா. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 2-வதாக சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 5-வது நாளில் தாயும் குழந்தையும் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு தாய் லாவண்யா ெசன்றிருந்ததாகவும், சிறிது நேரம் கழித்து வந்து குழந்தையை பார்த்தபோது மயக்க நிலையில் குழந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தை திடீர் சாவு தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்