வடக்கு சிலுக்கன்பட்டியில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
வடக்கு சிலுக்கன்பட்டியில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் நடந்தது. பயிற்சிக்கு பஞ்சாயத்து தலைவர் மாரிசெல்வம் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுடலைமணி வரவேற்று பேசினார். வாகைக்குளம் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் வேல்முருகன், தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் பிரேம்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், வடக்குவாய்ச் செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பகவதிகுமார் நன்றி கூறினார்.