நாசரேத்தில்வணிகர்கள் சங்க ஆண்டு விழா

நாசரேத்தில் வணிகர்கள் சங்க ஆண்டு விழா நடந்தது.

Update: 2023-08-28 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் நகர வணிகர் சங்க 23-வது ஆண்டு விழா நடைபெற்றது. சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை தாங்கினார். பாபுசெல்வன் வரவேற்று பேசினார். வி.எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் உறுப்பினர்கள் கிருஷ்ணராஜ், ரஞ்சன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மாமல்லன் ஆகியோர் பேசினர். இதில் வணிகர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அதிகாரி ஜோசுவா பிரவுன் தலைமையில் துணை இயக்குநர் சுகாதார பணிகளின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், பால்ஆபிரகாம், உடையார்குளம் மருத்துவ அலுவலர் விஜயகுமார் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சங்க கூட்டத்தில் நாசரேத்தில் பிர்கா (குறு வட்டம்) அமைக்க வேண்டும். ரெயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக எஸ்கலேட்டர் வசதி செய்து தரப்படவேண்டும். நாசரேத்தில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்லவும், வெளி ஊர்களில் இருந்து நாசரேத் வருவதற்கும் இரவு 8. 30மணிக்கு மேல் போதிய பஸ் வசதி செய்து தர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். வணிகர்கள் தராசுகளில் சீல் வைக்க வருகிற 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சங்க செயலாளர் செல்வன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்