நாசரேத்தில் இலக்கிய கூட்டம்
நாசரேத்தில் வாசகர் வட்டம் சார்பில் இலக்கிய கூட்டம் நடைபெற்றது.
நாசரேத்:
வள்ளுவர் வாசகர் வட்டம் சார்பில் நாசரேத் பொது நூலகத்தில் இலக்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் வாசகர் வட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்து வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் காளியப்பன் கலந்து கொண்டு இனிக்கும் இலக்கியம் என்ற தலைப்பில் பேசினார். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக அய்யாக்குட்டி, துணைத் தலைவராக கொம்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் அருள்ராஜ், காசிராஜன், ஆறுமுகப்பெருமாள், உட்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் பொன் ராதா நன்றி கூறினார்.