நாசரேத்தில்இந்து முன்னணி கூட்டம்
நாசரேத்தில் இந்து முன்னணி கூட்டம் நடந்தது.
நாசரேத்:
நாசரேத் சுற்று வட்டார அனைத்து கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இ்க்கோவில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்துவது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் த.அரசுராஜா, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அருணாச்சலம், பா.ஜ.க. நகர தலைவர் பார்த்ரசாரதி உட்பட நாசரேத் சுற்று வட்டார இந்து அமைப்பினர் திரளாக கலந்துகொண்டனர்.