நாசரேத்தில் கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து
நாசரேத்தில் கட்டிட தொழிலாளியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் பெத்தானியா நகரை சேர்ந்த திருமலைபாண்டியன் மகன் மாரிமுத்து (வயது 40). இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினரான சுடலைமுத்துவுக்கும், நாசரேத் விநாயகர் கோவில் தெரு ராசு மகன் மாயாண்டி (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சுடலைமுத்துவிடம் மாயாண்டி தகராறு செய்து கத்தியால் குத்தமுயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த மாரிமுத்து, மாயாண்டியை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி கத்தியால் மாரிமுத்துவை குத்திவிட்டு தப்பி ஓடவிட்டார். காயமடைந்த மாரிமுத்து ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தார்.