நம்பியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; மரங்கள் சாய்ந்தன

நம்பியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் மரங்கள் சாய்ந்தன.

Update: 2023-06-04 21:10 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே மலையபாளையத்தில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழையாக 6 மணி வரை கொட்டியது. ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதேபோல் அருகே உள்ள மலையபாளையம், சின்னசெட்டியார்பாளையம், நல்லகட்டிபாளையம், அழகம்பாளையம் வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பழமையான ஆலமரம், புங்கன் மரம் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாழைகள், தென்னைமரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினார்கள். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மின்சார கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மின்ஊழியர்கள் அங்கு சென்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சூறாவளிக்காற்றால் பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஆலங்கட்டி மழை பெய்ததில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்