நாலுமாவடியில்2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து

நாலுமாவடியில் 2 ஆயிரம் பேருக்கு மோகன் சி.லாசரஸ் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கினார்.

Update: 2022-12-25 18:45 GMT

தென்திருப்பேரை:

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நாலுமாவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும்விழா நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நாலுமாவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விருந்தினை உண்டு மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்