நாகூர்:
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. நாகூரில் நேற்று முன்தினம் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதை தொடர்ந்து பரவலாகமழை பெய்தது. இந்த மழையானது விட்டு, விட்டு பெய்தது.நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதேபோல் தெத்தி, மேல நாகூர், முட்டம், வடகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில். பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.