நாகை மாவட்டத்தில், இன்று மின்நிறுத்த அறிவிப்பு ரத்து
நாகை மாவட்டத்தில், இன்று மின்நிறுத்த அறிவிப்பு ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்பாளையம்:
நாகை வடக்கு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று(சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுகிறது. மேலும் வழக்கம் போல் மின்சாரம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.