நாகையில், மினி மாரத்தான் போட்டி

நாகையில், மினி மாரத்தான் போட்டி

Update: 2022-11-27 18:45 GMT


பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி நாகையில் மினி மாரத்தான் போட்டிைய கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மினி மாரத்தான் போட்டி

நாகை மாவட்டம் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா தொடர்பாக மாவட்ட அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நேற்று காலை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, அவுரித்திடலில் நிறைவுபெற்றது.

பாராட்டு சான்றிதழ்

இதில் பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்களும், கல்லூரி மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்