முத்தையாபுரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது

முத்தையாபுரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது

Update: 2023-07-21 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் வரவேற்று பேசினார். கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் பிரபு ஜமீன் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். வருகிற 23-ந் தேதி தெற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், அனைத்து வார்டுகளில் உள்ள குறைகளை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மண்டல பொருளாளர் பாலகுமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், முருகன், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் தனவீரபாண்டியன், மகளிர் அணி மண்டல தலைவி செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்