மூரார்பாளையத்தில் உலக மண் தினவிழா
மூரார்பாளையத்தில் உலக மண் தினவிழா கொண்டாடப்பட்டது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உலக மண் தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி தர்மலிங்கம், விதை சான்று அலுவலர் தேவி, உதவி விதை அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி வேளாண்மை அலுவலர் முகமது நாசர் வரவேற்றார்.வேளாண்மை அலுவலர் ஆனந்தன் கலந்து கொண்டு மண்வள மேலாண்மை, மண்பரிசோதனை அவசியம், இயற்கை உரங்களின் அவசியம், இணைந்த உரக்கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த அங்கக வேளாண்மை முறைகள் ஆகியவைகள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். இதில் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா, ஊராட்சி செயலாளர் பெரியசாமி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.