மெஞ்ஞானபுரத்தில் பலத்த மழை

மெஞ்ஞானபுரத்தில் திங்கட்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-06-05 18:45 GMT

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வந்தனர். சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வஇந்த நிலையில் நேற்று மாலை 4மணியளவில் இப்பகுதியில் திடீரென மேகம் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. மாலை 5 மணிவரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் அனல் காற்று வீசிய இப்பகுதியில் இதமான சூழல் உருவானது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்