மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா
மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் நடந்த விழாவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டி
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் ஊராட்சி அசரியா நகரில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு முன்னிலையில் தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நவீன பஸ்நிறுத்தம்
உடன்குடி -செட்டியாபத்து சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் பிரிவில் தனியார்குழுமம் சார்பில் கட்டப்பட்ட நவீன பஸ்நிறுத்த திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் க.பாலமுருகன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய நவீன பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலர் இளங்கோ மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.