மதுரையில் கள்ளக்காதலன் வீட்டில் கழுத்தை அறுத்து பெண் கொலை- பரபரப்பு தகவல்கள்

கள்ளக்காதலன் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Update: 2022-11-12 20:30 GMT


கள்ளக்காதலன் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மில் தொழிலாளி

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 43). இவர் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மாவு மில்லில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில், சிந்தாமணி கங்காநகர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் பாண்டியம்மாள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கீரைத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

கள்ளக்காதல் பிரச்சினை

பாண்டியம்மாள் வேலை செய்த மில்லில், சிந்தாமணி கங்காநகர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரும் வேலை செய்தார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பாண்டியம்மாள், செல்வம் வீட்டுக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதற்கிடையே, நேற்று காலை, செல்வம் வீட்டில் பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக் கலாம் என சந்தேகிக்கிறோம். அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரிக்கிறோம். செல்வம் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடித்தபின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும்.

இவ்வாறு கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்