லோயர்கேம்பில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுக்குழு கூட்டம்

லோயர்கேம்பில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது;

Update:2022-07-24 21:26 IST

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வக்குமார் கொடி ஏற்றினார். பாபநாசம் கோட்ட செயலாளர் ரவீந்திரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பெரியாறு கோட்ட செயலாளர் சக்தி வடிவேல் வரவேற்றார். மாநில செயலாளர் வண்ணமுத்து பொதுக்குழுவை தொடங்கி வைத்தார்.

பொதுக்குழுவில் துணை மின்நிலையங்களில் அவுட் சோர்ஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரியாறு, நெல்லை, கோதையாறு, பாபநாசம் ஆகிய மின் உற்பத்தி கோட்ட பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்