கும்பகோணத்தில், காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
கும்பகோணத்தில், காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
கும்பகோணம்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் மாவட்டம் தோறும் 75 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்று வருகின்றனர். அதன்படி தஞ்சை மாவட்டம் திருவையாறில் கடந்த 9-ந்தேதி தொடங்கிய மக்கள் விழிப்புணர்வு பாதயாத்திரை நேற்று கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.