குலசேகரன்பட்டினத்தில் வாலிபர் மீது தாக்குதல்

குலசேகரன்பட்டினத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் வண்ணார்தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் முத்து சுரேஷ் (வயது 19). இவர் கடந்த 7-ந் தேதி அழகர்தெருவை சேர்ந்தவர்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரை செல்வதற்காக முத்துசுரேஷ் வசிக்கும் தெரு வழியாகசென்றுள்ளனர். இதை கண்டித்த முத்து சுரேஷ் தரப்பிற்கும், குலசேகரன்பட்டினம் அழகர்தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (19), சத்தியா (21) கன்னித்துரை (19), முருகன், கோபி ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கடற்கரைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டு முன்பு நின்றிருந்த முத்துசுரேசை இசக்கியப்பன் உட்பட 5 பேரும் அவதூறாக பேசி கல்லால் முத்து சுரேசை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து இசக்கியப்பன், சத்தியா மற்றும் கோபியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்